ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பை தவிர்த்திருக்க வேண்டும்..! – எல்.முருகன்

Published by
லீனா

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முடிவை தமிழக கட்சிகள் தவிர்த்திருக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி. 

நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்  தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, தவக உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்துள்ளது.  நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் தாமதம் செய்வதை கண்டித்து இந்த தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் ஆகியோரும், பாஜக சார்பில் அண்ணாமலை,  வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோரும், பாமக சார்பில் சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முடிவை தமிழக கட்சிகள் தவிர்த்திருக்க வேண்டும். தமிழக அரசு எந்த திட்டத்தை கொடுத்தாலும், அதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என்றும், இந்தியா – இலங்கை இடையிலான கூட்டு கூட்டத்தில் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு! 

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

23 minutes ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

59 minutes ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

2 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

2 hours ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

2 hours ago