ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பை தவிர்த்திருக்க வேண்டும்..! – எல்.முருகன்
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முடிவை தமிழக கட்சிகள் தவிர்த்திருக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி.
நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, தவக உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்துள்ளது. நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் தாமதம் செய்வதை கண்டித்து இந்த தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளது.
ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் ஆகியோரும், பாஜக சார்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோரும், பாமக சார்பில் சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முடிவை தமிழக கட்சிகள் தவிர்த்திருக்க வேண்டும். தமிழக அரசு எந்த திட்டத்தை கொடுத்தாலும், அதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என்றும், இந்தியா – இலங்கை இடையிலான கூட்டு கூட்டத்தில் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.