மருத்துவ பல்கலை., துணைவேந்தராக நாராயணசாமியை நியமித்து ஆளுநர் உத்தரவு!
மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கே நாராயணசாமியை நியமித்து ஆளுநர் உத்தரவு.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமித்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கே.நாராயணசாமி 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்.
தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வருகிறார் கே.நாராயணசாமி. மருத்துவத்துறையில் 33 ஆண்டுகள் பணி அனுபவமும் 13 ஆண்டுகள் நிர்வாக அனுபவமும் கொண்டவர் கே.நாராயணசாமி. கடந்த 2018 முதல் 2022 வரை சென்னை மருத்துவ கல்லூரியில் கல்லீரல் துறை இயக்குநராக இருந்துள்ளார். மருத்துவம் தொடர்பாக பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளை ஒருகிணைத்துள்ளார் கே.நாராயணசாமி.