ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!
தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு ஆளுநர் மாளிகை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறிக்கும் மசோதா அண்மையில் சட்டமான நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை அழைத்து துணைவேந்தர்கள் மாநாடு நடத்துகிறார் ஆர்.என்.ரவி.
இதில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், 4ஆம் ஆண்டாக நடைபெறும் மாநாட்டை 25ஆம் தேதி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்.
இரு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் உயர்கல்வியில் புதுமையான அணுகுமுறைகளை புகுத்த ஆலோசிக்கப்படும். மேலும், கல்வித் திறனை மேம்படுத்துவதில் AI தொழில்நுட்பத்தை புகுத்துவது குறித்தும் மாநாட்டில் பேசப்படவுள்ளது.