ஆளுநர்கள் ஜனநாயக மரபுகளை கற்றுக் கொள்ள வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
அதிகார வரம்பை மீறி செயல்பட எண்ணும் ஆளுநர்கள் ஜனநாயக மரபுகளை கற்றுக் கொள்ள வேண்டும் அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர்ராவ் அமர்வு கூறுகையில், பேரறிவாளனை விடுவிக்க வேண்டியது தானே, பேரறிவாளனை யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் ஏன் அவர் சிக்க வேண்டும் என்றும், பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து, பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம். ஆளுநர், குடியரசு தலைவர், அதிகாரம் குறித்த விஷயங்களுக்கு போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. அதனால், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை மத்திய அரசு கொண்டு வரவேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநில அமைச்சரவை எடுத்த முடிவை மாற்ற ஆளுநருக்கு அதிகாரமில்லை” என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. இது சட்டமன்ற ஜனநாயகம் மற்றும் மாநில சுயாட்சி கொள்கைக்கு வலுசேர்பதாக உள்ளது. அதிகார வரம்பை மீறி செயல்பட எண்ணும் ஆளுநர்கள் ஜனநாயக மரபுகளை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
“மாநில அமைச்சரவை எடுத்த முடிவை மாற்ற ஆளுநருக்கு அதிகாரமில்லை” என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. இது சட்டமன்ற ஜனநாயகம் மற்றும் மாநில சுயாட்சி கொள்கைக்கு வலுசேர்பதாக உள்ளது. அதிகார வரம்பை மீறி செயல்பட எண்ணும் ஆளுநர்கள் ஜனநாயக மரபுகளை கற்றுக் கொள்ள வேண்டும்.
— Mano Thangaraj (@Manothangaraj) April 27, 2022