ஆளுநரின் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையின் போது, உரையில் இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்து வாசித்தார். இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் குறித்து பேசும் போது, ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பொங்கல் அழைப்பிதழிலும் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என அச்சிடப்பட்டிருந்தது. இதற்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆளுநரின் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசி வருகின்றனர். எம்.பி டி.ஆர்.பாலு, சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளனர்.
சென்னை : மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட இருந்த நிலையில் மக்களின் தொடர் போராட்டம், அரசியல் தலைவர்களின்…
சென்னை : இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு…
மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் 2 ஆண்டுகள் கடந்தும்…
சென்னை : கடந்த ஆண்டு அக்.15ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 3 மாதங்களாக நீடித்து வந்து நிலையில்,…
சேலம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்ட கட்சி ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. …
சென்னை : கோயம்புத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில்முனைவோருக்கான “ChatGPT”…