தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரி ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து,அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,தங்கம் தென்னரசு ஆகியோரும் நேரில் சென்று வலியுறுத்தியிருந்தனர்.ஆனால், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.
இதனால்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.
இதனைத் தொடர்ந்து,ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 28 ஆம் தேதி) மாலை 4 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் உட்பட 13 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…