திமுக எம்.பி தயாநிதிமாறனுக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்..!
மகளின் திருமணத்திற்கு ஆளுநர் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாகவும், அரசு பணம் பயன்படுத்தியதாகவும் மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்க்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த விளக்க குறிப்பில், மாண்புமிகு ஆளுநர் அவர்களின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திரு தயாநிதி மாறன் அவர்கள் பொதுவெளியில் குற்றம் சாட்டியதாக மேற்கோள் காட்டி ஆகஸ்ட் 24, 2022 அன்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவல்கள் தவறானவை என்பதும், விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை என்பதால் நடந்தவை பொதுவெளியில் அறியப்பட வேண்டும்.
நடந்த உண்மைகள்
- மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பிப்ரவரி 21 – 23, 2023 ஊட்டியில் குடும்ப நிகழ்ச்சியை நடத்தினார் .
- மாண்புமிகு ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ்பவனில் யாரும் தங்கவில்லை.
- விருந்தினர்கள் மட்டுமின்றி மாண்புமிகு ஆளுநரின் குடும்ப உறுப்பினர்கள் பயன்பாட்டுக்கு கூட தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
- தனியார் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் ராஜ் பவன்
சமையலறை. விருந்தினர்களுக்கு தேநீர் அல்லது காஃபி வழங்குவதற்கு கூட
பயன்படுத்தப்படவில்லை. - முழு நிகழ்வுக்கான விளக்கொளி வசதிகள் ராஜ் பவனில் இல்லாமல் ஒரு தனியார் மூலம் செய்யப்பட்டன.
- மலர் அலங்காரத்துக்கான பூக்கள் கூட சந்தையில் இருந்து தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டன.
- முழு நிகழ்வுக்கான பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டனர்.
ராஜ் பவன் ஊழியர்கள் எவரும் பயன்படுத்தப்படவில்லை. - விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள். சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் மாண்புமிகு ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார்.
- மாண்புமிகு ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் மாண்புமிகு ஆளுநரே ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 24, 2023