உயிர்பலிகளை அதிகரிக்கும் கவர்னரின் தாமதம் – கே.பாலகிருஷ்ணன்
மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் என சிபிஐ(எம்) வலியுறுத்தல்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 மணிநேரத்தில் பதில் அளித்திருந்தது.
இதற்கிடையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் காலாவதியானது. இந்த நிலையில், இன்று ஆளுநரை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் சந்தித்து பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும், இது தொடர்பாக விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30 உயிர்கள் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. தாமதமாகிற ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் உயிர்களோடு விளையாடுகிற விபரீதமாக உள்ளது.
மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு கவர்னரை சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது.’ என தெரிவித்துள்ளார்.
மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு #CPIM கவர்னரை வலியுறுத்துகிறது. #TNGovt #TnGovernor #OnlineRummyOrdinance https://t.co/oSHXt91t6J @rajbhavan_tn @CMOTamilnadu @kbcpim pic.twitter.com/URhL3gPnWU
— CPIM Tamilnadu (@tncpim) December 1, 2022