7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதலால் பயனேதுமில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் :
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது.இந்த சட்டம் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆளுநர் ஒப்புதல் தரவில்லை :
ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.இதனால் ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முதலமைச்சர் ,அமைச்சர்கள் சந்திப்பு :
முதலில் முதலமைச்சர் பழனிசாமி ஆளுநரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.இந்த சந்திப்பிற்கு பின்னரும் எந்த பயனும் இல்லை.இதனைத்தொடர்ந்து, 7.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது” என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
ஆகவே 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருடன் 5 அமைச்சர்கள் சந்தித்தனர்.இதன் பின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக கூறினார்.
ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் :
இதனிடையே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்தார்.அதில், 7.5 % உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் தேவை. நீட் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி அனைத்து கோணங்களிலும் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
திமுக போரட்டம் :
7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி , திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராததால் உள்துறை அமைச்சகத்துக்கு திமுக எம்பிக்கள் கடிதம் எழுதினார்கள்.
அரசாணை வெளியிட்ட தமிழக அரசு :
நேற்று தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு மேல் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சுமார் 40 நாட்களுக்கு மேல் ஆளுநர் இன்று ஒப்புதல் :
இன்று (அக்டோபர் 30-ஆம் தேதி ) மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.
திருமாவளவன் கருத்து :
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு.பயனேதுமில்லை.இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் (AIQ ) 15% வழங்க தமிழக அரசு மறுப்பதன் மூலமே ஓபிசி மாணவர்களுக்கான 50% குறித்தும் உடனே மையஅரசு கொள்கை முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…