ஆர்.எஸ்.எஸ் கொள்கையை திணிப்பதே ஆளுநரின் நோக்கம் – டி.ஆர்.பாலு
எம்.பி டி.ஆர்.பாலு, ஆளுநர் அவை மரபுகளை மீறியது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் விளக்கினோம் என எம்.பி டி.ஆர்.பாலு பேட்டி.
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையின் போது, உரையில் இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்து வாசித்தார். இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் குறித்து பேசும் போது, ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில்,ஆளுநரின் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசி வருகின்றனர். எம்.பி டி.ஆர்.பாலு, சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி டி.ஆர்.பாலு, ஆளுநர் அவை மரபுகளை மீறியது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் விளக்கினோம். முறையீடு குறித்து பரிசளிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் ஆளுநர் தேசிய கீதத்தை இழிவுபடுத்தி உள்ளார். ஆளுநரைப் பொருத்தவரையில் ஆர்.எஸ்.எஸ் இன் கொள்கைகளை திணிப்பது தான் அவரது நோக்கம். ஆளுநரின் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என தெரிவித்துள்ளார்.