தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி விலகுவதே சரி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தொல்.திருமாவளவன் ,”இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் , தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு ஈடேறி உள்ளதாகவும் ” தெரிவித்துள்ளார். மேலும்,” ஆளுநரின் தமிழர் விரோத போக்கிற்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், ஆளுநர் தனது பணியை செய்யாமல் இருந்ததற்காக பதவி விலக வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 தமிழர் விடுதலையை வலியுறுத்திய தமிழக சட்டசபையின் தீர்மானம் குறித்து ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில்,சட்ட போராட்டம் மூலமாக அவர்கள் விடுதலை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…