ஆளுநர் பதவி விலக வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்
தமிழக ஆளுநர் தாமாகவே பதவி விளக்க வேண்டும் என சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி.
திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஒரு பொறுப்பு.
ஆளுநர் மத்திய பாஜக அரசின் பிரதிநிதி அல்ல. ஆனால், தமிழக மற்றும் கேரள ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார்.
எல்லா நாடுகளும் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது உண்மையல்ல. மதசார்பற்ற மாநிலத்தில் இந்துத்துவாவை நிர்மாணிக்க ஆளுநர் முயற்சி செய்கிறார். தமிழக ஆளுநர் தாமாகவே பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.