தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-ஐ அதிமுக அரசு கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று முக ஸ்டாலின் அறிக்கை.
நில மற்றும் கட்டட உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது நிலத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி வழங்கவும் உதவிடும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-ஐ அதிமுக அரசு கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நில மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கும் ஆரம்ப நிலையிலேயே தன்னுடைய நிலம் அல்லது கட்டடம் எடுக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள உதவும் விதி-21 தொடர வேண்டும் என்று திமுக உறுப்பினர் எஸ்.ரகுபதி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதனை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. புதிய திருத்த சட்டம் மூலம் கார்ப்ரேட் மற்றும் தனியாரின் மக்கள் விரோத திட்டங்களுக்கு அதிமுக அரசு முன் வந்துள்ளது.
விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கு தெரியாமலேயே எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வந்தது போன்று, பொதுமக்களின் கலந்தாய்வை ரத்து செய்யும் இந்த சட்டத் திருத்தமும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒவ்வொருவரின் சொத்துரிமை மற்றும் நிலா உரிமையை பாதிக்கும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு திருத்த சட்டம் 2020-க்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…