மாநில பாஜக தலைவராக ஆளுநர் செயல்பட வேண்டாம் – டிஆர் பாலு
பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் என டிஆர் பாலு குற்றசாட்டு.
தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில துணை தலைவர் போதும் ஆளுநர் ரவி, பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம் என எம்பியும், திமுக பொருளாளருமான டிஆர் பாலு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதனம், ஆரியம், திராவிடம், காலனி ஆதிக்கம் குறித்து ஆளுநர் கூறும் கருத்து ஆபத்தானது எனவும் கூறினார்.
மேலும், ஆளுநர் ரவியின் திட்டம்தான் என என்று புரிந்துகொள்ள முடியவில்லை, வகுப்புவாத பிரிவினை அரசியலை பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வது தான் அவரது நோக்கம். இதுவரை நுண்ணிய வர்ணாசிரம அரசியலை பேசி வந்த ஆளுநர் தற்போது வெளிப்படையாக அரசியல்வாதியாக பேசுகிறார். கமலாயத்தில் போய் பேச வேண்டியதை ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு பேசுவது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தார்.