துணைவேந்தர் நியமன விவகாரம்.! தனது தேடுதல் குழுவை ‘வாபஸ்’ பெற்றார் ஆளுநர் ரவி.! 

Tamilnadu Governor RN Ravi

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். துணை வேந்தர் நியமனம் தொடர்பான முடிவுகளையும் ஆளுநர் தான் தேர்வு செய்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் (கோவை), கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ்.. முதலமைச்சர் அறிவிப்பு

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க வழக்கமாக, ஆளுநர் தரப்பில் இருந்து ஒரு நபரும், மாநில அரசு சார்பில் ஒரு நபரும், கல்வியல் குழு கூட்டமைப்பு சார்பில் ஒரு நபரும் தேர்ந்தெடுக்கப்படுவர். அதில் ஒருவரை பல்கலைக்கழக வேந்தராக பொறுப்பில் இருக்கும் மாநில ஆளுநர் தேர்வு செய்வார். இது தொடர்பாக ஆளுநர் முன்னதாக யுஜிசி எனும் பல்கலைக்கழக மானிய குழு சார்பில் ஒருவரை தமிழக அரசின் தேர்வு குழுவில் சேர்க்க வேண்டும் என  தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது ஆனால் இந்த விவகாரத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என தமிழக அரசு கூறியிருந்தது.

இதன் காரணமாக, இந்த விவகாரம் பல்வேறு இடங்களில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக அரசு இடையே எதிர்ப்பு வாதங்களை பெற்று வந்தது. இந்த சமயத்தில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, தன் சார்பில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்கும் தேடுதல் குழுவை திரும்ப பெற்றுள்ளார்.

இது குறித்து ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை திரும்ப பெறுவதாகவும், தமிழக அரசு, பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு யுஜிசி மானிய குழு உறுப்பினரை சேர்க்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறி தனது சார்பில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை ஆளுநர் ரவி திரும்பபெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்