வேறொரு நாளில் உங்களை சந்திக்கிறேன்… ஆளுநர் ஆர்என் ரவி!

rn ravi

RN Ravi : தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வேறொரு நாளில் சந்திப்பதாக கூறியுள்ளார்.

நாடாளுமனற்ற மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருபக்கம் விறுவிறுப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த மாதம் டெல்லியில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Read More – மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!

அதுமட்டுமில்லாமல், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இதன்பின், தலைமறைவாக இருக்கும் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Read More – இந்தியாவிலேயே முதல் முறை…கேரள அரசின் பிரத்யேக OTT தளம் அறிமுகம்.!

ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் மட்டுமில்லாமல், அவரது சகோதரர் முகமது சலீம் உள்ளிட்ட சிலரது பெயர்களும் அடிபட்டது.

எனவே, ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கி வருவது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாகரத்தில் திமுக அரசை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

Read More – புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.!

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழக அரசியல் மற்றும் போதைப்பொருள் விவகாரம், குறிப்பாக ஜாபர் சாதிக் குறித்து ஆளுநர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேறொரு நாளில் உங்களை சந்திக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் ஆளுநர் ரவி கூறியுள்ளார். ஒளவையார் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி அவ்வையார் சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.  மகளிர் தலைமைத்துவத்திற்கு அவ்வையார் சிறந்த உதாரணம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஆராய்ச்சிகளிலும் பெண்கள் அதிக அளவில் உள்ளனர்.

மகளிர் மேம்பாடு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என கூறியிருந்தார். மேலும், தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விக்கு, வேறொரு நாளில் உங்களை சந்திக்கிறேன் என ஆளுநர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்