பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் – துரை வைகோ

Durai vaiko

சேலத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே 50 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

தமிழக அரசு ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆளுநரின் செயல்பாடு உள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.

மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும்…பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்!

சங்கரய்யா ஒரு விடுதலை போராட்ட வீரர். அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. எனவே இவர் தேசப்பற்று, நாட்டுப்பற்று பற்றி பேச இவருக்கு அருகதை கிடையாது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட ஒரு ஆளுநராக செயல்படக்கூடிய தகுதி அவருக்கு கிடையாது என தெரிவித்துளளார்.

மேலும், பாடப்புத்தகத்தில் ராமாயணம், மகாபாரதத்தை கொண்டு வந்தால், பைபிளையும், குரானையும் கொண்டு வர வேண்டும். பாஜக மதத்தை வைத்து அரசியலை செய்ய நினைக்கிறார்கள். மதத்தை, ஜாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மக்களிடம் என்றைக்கு மாற்றம் வருகிறதோ, அன்றைக்கு தான் அரசியலில் மாற்றம் ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்