ஆளுநர் விமர்சனம்! உண்மையாக அக்கறை இருந்தால் கோப்புக்கு ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி

Minister Ponmudi

சுதந்திர போராட்ட வீரர்கள் விவகாரம் தொடர்பாக ஆளுநரின் விமர்சனத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தமிழகத்தில் உரிய மரியாதை அளிக்கவில்லை என்பதற்கு பதில் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், விடுதலை போராட்ட வீரர்கள் குறித்த ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த சூழலில், போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இதற்கு பிறகாவது சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மீது ஆளுநருக்கு உண்மையாக அக்கறை இருந்தால் கோப்புக்கு ஒப்புதல் தர வேண்டும் என்றும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகம் புண்ணிய பூமி, இங்கு ஆரியம் – திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.சுதந்திரப் போராட்ட தியாகிகளை, மக்கள் நினைவிலிருந்து அகற்ற முயற்சிகள் நடக்கின்றன. தியாகிகளை ஜாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என பேசியிருந்தார். ஆளுநரின் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்தவகையில், அமைச்சர் பொன்முடியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pakistan Minister Khawaja asif
AR Rahman
TN Minister Palanivel Thiyagarajan say about TN Internet
RN Ravi
PahalgamTerroristAttack
Pak Deputy PM