தமிழக அரசு தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கமால் கிடப்பில் போடுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.
அதில், தமிழக அரசு தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அதனால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
2,310 பேருந்துகள்.. நவீன வசதிகள்… கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு.!
விசாரணையின்போது, ஆர்என் ரவி செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும், ஒருமுறை மசோதா திருப்பி அனுப்பினால் மறுமுறை மசோதா நிறைவேற்றி வரும்போது ஒப்புதல் அளிக்க வேண்டும்.எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வருடன், ஆளுநரும் பேச்சுவார்த்தை நடத்தி வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். நிலுவை உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து பேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…