இன்று பட்ஜெட் தாக்கல்… ஆளுநர் ரவி திடீர் டெல்லி பயணம்!

rn ravi

இந்தாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. இருப்பினும், தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையை முழுமையாக படிக்காமல், ஆளுநர் ரவி புறக்கணித்துவிட்டு சென்றார்.

கடந்த ஆண்டு அரசு உரையில் சில வார்த்தைகளை புறக்கணித்த ஆளுநர், இந்த முறை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தது சர்ச்சனையானது. அரசு கொடுக்கும் உரையை படிப்பது ஆளுநரின் கடமை என கூறி, பேரவையில் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தமிழக அரசின் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

இன்றைய பட்ஜெட்டில் மாபெரும் 7 தமிழ்க்கனவு – தமிழ்நாடு அரசு

இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்த சூழலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அதன்படி, இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார் ஆளுநர்.

4 நாட்கள் பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை ஆளுநர் ரவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், ஆளுநர் ரவி திடீர் டெல்லி சென்றுள்ளது முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்