2023இன் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ரவி தமிழக அரசின் நடவடிக்கை குறித்து பாராட்டி பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டின் (2023) முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.’ என தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. இந்திய அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் கீழ் தமிழகம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என குறிப்பிட்டார்.
மேலும், இந்தாண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, கரும்பு கொடுப்பதன் மூலம் தமிழக அரசு 2,429 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. என குறிப்பிட்டார்.
அடுத்தாக, கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. இலங்கையில் இருந்து வருவோர்களை முகாம்களின் தங்கவைக்கட்டுப்பாட்டு அவர்களுக்கு தேவையானதை அரசு செய்து வருகிறது.
இந்த அரசு போதைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து நீரை குருவை சாகுபடிக்காக காவிரி டெல்டா பகுதிகளுக்கு திறக்கப்பட்டது.
பாலுக்கான கொள்முதல் விலையை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயர்தபட்டுள்ளது. நீட் தேர்வு, ஏழை மற்றும் கிராம புற மாணவர்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்று இந்த அரசு கருதுகிறது. மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளை தமிழ்நாட்டின் உரிமைகளை அரசு பாதுகாத்து வருகிறது.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கையும் எடுத்துவருகிறது. விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு முதலமைச்சருக்கு பாராட்டுக்கள் என தெரிவித்தார் .
மேலும், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து தனது பாராட்டுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…