ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம்.! திமுக எம்.பி டி.ஆர்.பாலு விமர்சனம்.!
தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம். – திமுக எம்.பி டி.ஆர்.பாலு விமர்சனம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழ்நாட்டில் மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் பல்வேறு கருத்துக்களை அவர் அந்நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார்.
ஆளுநர்கள் கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக திமுக எம்பி டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக, தமிழ்நாடு – தமிழன் – தமிழ் ஆகியவை ஆளுநருக்கு கசப்பான ஒன்று எனவும், தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் எனவும் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
பீகாரும், உத்தரப்பிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது? என்பதும் தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பதும் எங்களுக்கு தெரியாதா? தமிழ்நாடு வளர்ந்திருப்பது
சிலருக்கு எரிச்சலை தரும். ஆனால், அதில் ஆளுநரும் ஒருவராக இருப்பது அதிர்ச்சியை தருகிறது. எனவும் அந்த அறிக்கையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.