“ஆளுநர் ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்”..திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் தீர்மானம்!
சட்டமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கும் ஆளுநர் ரவி, தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , பிடிஆர் பழனிவேல் ராஜன், ஏ.எல்.சுப்ரமணியம், அ.அ.ஜின்னா , ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என் ரவி சென்றார். அதனை கண்டித்து இதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே. தமிழர்களிடம் ஆளுநர் ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதைப்போல, பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.