சட்ட மசோதா விவகாரம்.! ஆளுநர் அரசியல் தான் செய்கிறார்.! அமைச்சர் துரைமுருகன் குற்றசாட்டு.!
ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை எனில், அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது பிறகு தெரியும். தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே செய்கிறார். – அமைச்சர் துரைமுருகன்.
வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பொன்னையில நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ‘ தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைகுறித்த அவசர சட்டம் நேற்றுடன் காலாவதி உள்ளது. தற்போது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைமசோதாவுக்காவது ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்.
ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனில், அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது பிறகு தெரியும். தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே செய்கிறார். என குற்றம் சாட்டினார் அமைச்சர் துரைமுருகன்.