எனக்கு சிறு வயதில் குழந்தை திருமணம் நடைபெற்றது.! மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு.!

தனக்கு சிறு வயதில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேசியுள்ளார்.
பீகார் மாநில மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆளுநர், உலகில் மிகவும் பழமையான மொழிகளில் சமஸ்கிருதமும், தமிழும் இருக்கிறது என்றார் . மேலும், தமிழில் இருந்து சில வார்த்தைகள் சமஸ்கிருதத்திலும், சமஸ்கிருதத்தில் உள்ள வார்த்தைகள் தமிழிலும் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில் , இதில் எந்த மொழி பழமையான மொழி என்ற விவாதம் நீண்ட வருடங்களாக நடந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அடுத்ததாக , தமிழகத்தில் எந்த இடம் பிடிக்கும் என்றால் அதை என்னால் கூற முடியாது என்றும், உடலில் உள்ள மொத்த பாகங்களில் எந்த பாகம் பிடிக்கும் என்று கேட்டால் கூற முடியாதோ அது போல, தமிழ்நாட்டில் எந்த இடம் பிடிக்கும் என்பதற்கு என்னால் பதில் கூற முடியாது எனக்கு ஆளுனர் பேசினார்.
தனது சிறு வயது வாழ்வு பற்றி மனம் திறந்த ஆளுநர் ரவி, எனக்கு சிறுவயதிலேயே குழந்தை திருமணம் நடைபெற்றது எனவும், இருவரும் திருமணத்திற்கு பிறகு ஒன்றாக சேர்ந்து வளர்ந்தோம் என்றும் குறிப்பிட்டார். மேலும், தனது மனைவி கல்லூரிக்கு செல்லவில்லை என்றும், இருந்தாலும் அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார் என்றும் ஆளுநர் ரவி குறிப்பிட்டு பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025