கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ஆளுநர் ரவி இரங்கல்.!
கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனது பிரார்த்தனைகளும் எண்ணங்களும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். – ஆளுநர் ரவி
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) July 29, 2023
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலர் உயிரிழந்தவர்கள் செய்தி அறிந்து தான் வருத்தமடைந்ததாகவும், அவர்கள் குடும்பத்திற்கு எனது பிரார்த்தனைகளும், ஆழ்ந்த இரங்கல்களும் தெரிவித்துக்கொள்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் வேண்டிக்கொள்வதாகவும் டிவீட்டில் பதிவிட்டுள்ளார்.