ஆளுநர் ரவி, அண்ணாமலை இன்று காலை டெல்லி பயணம்.!
ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று காலை சென்னையிலிருந்து, டெல்லிக்கு பயணம் செய்கிறார். தமிழக சட்டசபையில் இன்று ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா நிறைவேற்றப்படும் நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் கவனம் பெறுகிறது. அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று காலை 11 மணியளவில் டெல்லிக்கு செல்கிறார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து மோதல் கருத்துக்கள் எழுந்துவந்து நிலையில் அண்ணாமலை டெல்லி சென்று பாஜகவின் தலைமை நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அண்ணாமலை இன்று மதியம் பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.