பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு
தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். இதில் 23,747 தனித்தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறைக்கைதிகளும் அடங்குவர்.
ஆளுநர் வாழ்த்து
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆளுநர் ரவி, இன்று மேல்நிலை பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர் தன்னம்பிக்கையுடனும், தெளிந்த மனதுடனும் தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் ரவி, இன்று மேல்நிலை பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர் தன்னம்பிக்கையுடனும், தெளிந்த மனதுடனும் தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வாழ்த்து தெரிவித்துள்ளார். #ExamWarriors@PMOIndia @EduMinOfIndia @pibchennai @ANI @PTI_News
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 13, 2023