காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை…!
சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவர் அக்டோபர் 02 ஆம் தேதி 1869 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.இன்று இவருக்கு 150 -வது பிறந்தநாள் ஆகும்.
இந்தியா முழுவதும் இவரது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.