2 பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் உத்தரவு..!

தஞ்சை தமிழ்ப் பல்கழைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக வி.திருவள்ளுவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக திருவள்ளுவன் இருப்பார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தின் பேராசிரியரான இவர் 28 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர்.
அதேபோல தமிழ்நாடு உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு உடற்கல்வி & விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.சுந்தர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகப்பா உடற்கல்வி பல்கலைக்கழகத்தின் முதல்வரான எம்.சுந்தர், 26 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.