ஆளுநர் என்.ஆர்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – வைகோ கடும் கண்டனம்!
தமிழ்நாடு ஆளுநர் என்.ஆர்.ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றும் வைகோ கடும் கண்டனம்.
சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் தமிழக ஆளுநர் என்ஆர் ரவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஒருவர் அரசியல் சட்ட நெறிகளை மீறி சனாதன தர்மம் இந்தியாவை வழிநடத்துகிறது என்று பேசியது கண்டனத்துக்குரியது. சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தர்மத்தை நிலைநாட்ட துடிக்கும் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை தூக்கி பிடிக்கிறார் ஆளுநர் என குற்றசாட்டினார்.
இந்தியாவை வழிநடத்துவது அம்பேத்கரின் அரசியல் சட்டமே தவிர நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல என்றும் கூறியுள்ளார். எனவே, ஆளுநர் என்ஆர் ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றும் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிறவி பேதத்தை கற்பிக்கும் சனாதன தர்மத்துக்கு ஆதரவாக பேசும் ரவி பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். இதனால் தமிழாண்டு ஆளுநர் என்ஆர் ரவியை குடியரசு தலைவர் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.