ஹெச்.ராஜாவை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.
இதனால் திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய காவல்துறை 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது.பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை தலைமறைவாகிவிட்டதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.மறு நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது.இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே அதே நாளில் உயர்நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்ததாக வழக்கறிஞர்கள் சி.ராஜசேகர்,காங்கிரசை சார்ந்த சுதா,கனகராஜ் மற்றும் ராஜா முகமது உள்ளிட்டோர் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க முறையிட்டனர்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதை விசாரிக்க மறுத்து மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் முறையிட்டவர்களை போலீசிடம் புகாரளிக்க நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளனர்.முகாந்திரம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.
ஒரு அமர்வு மறுத்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 25 ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார்.தாமாக முன் வந்து விசாரிக்க கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் முறையிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் ஹெச்.ராஜா தரப்பு முறையிட்டார்.
அதேபோல் சி.டி.செல்வம் அமர்வு தன்னை ஆஜராக உத்தரவிட அதிகாரம் இல்லை என்று முறையிட்டுள்ளார். மேலும் என் மீது சிடி செல்வம் அமர்வு சுவோமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியாது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே சுவோமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியும்.
இதற்கு உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் ஆய்வு செய்யப்படும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு பதில் அளித்தது.
அதேபோல் சென்னை ராஜ்பவனில் உள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திடீரென்று அன்றே சந்தித்தார்.சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நீதிமன்றத்தை அவதுறாக பேசிய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஹெச்.ராஜாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்தை கடந்த செப்டம்பர் 25ம் சந்தித்து, அடைக்கலம் கொடுத்துள்ளார் என்று ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் துரைசாமி சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…