7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை – திருமாவளவன்
7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை பெற்று வருகின்றனர்.
நீண்ட நாட்களாக 7 பேரை விடுவிக்க கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக திருமாவளவன் எம்.பியுடன் சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அற்புதம்மாள்.
இதன் பின்னர் எம்.பி. திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,7 பேர் விடுதலை தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்தோம்.அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.