மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையே மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார் என அமைச்சர் பொன்முடி பேட்டி.
சென்னையில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆளுநர் முயற்சி செய்கிறார். பல்கலைக்கழகம் தன்னிச்சையாக செயல்படவில்லை என ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் பத்திரிகைகளில் செய்தி கொடுப்பதன் அவசியம் என்ன?
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலையே கூறிவிட்டார். எல்லாத்துறையிலும் தாம் தான் எல்லாம் என ஆளுநர் ரவி நினைக்கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையே மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார்.
பல்கலை. சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டும் ஆளுநர், அதே கூட்டத்தை ராஜ்பவனில் ஏன் நடத்தினார். தவறுகளை முறையாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…