தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கைய்யெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார் என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், சங்கரய்யாவிற்கு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வழுத்து வரும் நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது முடிவெடுக்காத ஆளுனருக்கு எதிராக, தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, நிர்வாக யுத்தத்தை நடத்தும் ஆளுநர் மாளிகையின் அரசியல் முடிவுக்கு வரவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…