தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை என ஆளுநர் மாளிகை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

rn ravi

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு அதற்கு அடுத்த வரியான தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பாடல் வரி பாடப்பட்டது.

திராவிடம் என்கிற வார்த்தை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் பெரிய சர்ச்சையே வெடித்தது. இதற்கு பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.  இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  ஆளுநரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது ஆளுநருக்கு அதீத மரியாதை உண்டு.

இன்று அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தை விடுபட்டது பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தினோம். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர, ஆளுநருக்கோ  அல்லது அவரது அலுவலகத்திற்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.


இதனையடுத்து, இது முற்றிலும் கவனக்குறைவால் நடந்த நிகழ்வு. தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம்” என தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை -டிடி தமிழ் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக, மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்