ஆளுநருக்கு அதிகாரமில்லை.. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை – உச்சநீதிமன்றம்
அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது பற்றி முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதன்படி, அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை. அதாவது, ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையே சரியானது. இதனால், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சரியானதே, அதில், உச்சநீதிமன்றம் தலையிட தேவையில்லை என்றும் இதனால் இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர தடையில்லை என கூறி செந்தில் பாலாஜிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
இதன்மூலம், அமைச்சரவையில் ஒருவர் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில முதல்வருகே உள்ளது. அதில், தலையிட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.