தமிழகத்தில் ஆளுநர் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளார்.. வரலாற்றிலேயே இதுபோன்று கிடையாது – கேஎஸ் அழகிரி

ks alagiri

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரையில் ஆளுநர் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளார். ஒரு ஆளுநர் இந்தளவுக்கு பிரச்னைக்குரிய நபராக மாறியது என்பது இதுவரை தமிழக வரலாற்றில் கிடையாது.

எவ்வளவு சிரமங்களை சந்தித்தாலும், அதைப்பற்றி அக்கறை இல்லாதபோல் ஆளுநர் இருக்கிறார். நாங்கள் உத்தரவிட்டபிறகு, திருப்பி மசோதாக்களை ஏன் அனுப்பினீர்கள் என இன்றைக்கு உச்சநீதிமன்றமே ஆளுநருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஒரு ஆளுநருக்கு இது தேவையா?, ஆளுநர் ஏன் கையெழுதியிடவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதற்கான அர்த்தம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

5 மாநிலங்களில் ரூ.1,760 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், பணம் பறிமுதல் – தேர்தல் ஆணையம்..!

எனவே, தமிழகம் சட்டமன்றம் சிறப்பான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. எல்லா விஷயங்களிலும் அரசிடம் ஆளுநர் தோற்றுக்கொண்டிருக்கிறார். எவ்வளவு தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் ஆளுநர் கிறுக்குத்தனம் செய்து வருகிறார். ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை தமிழக காங்கிரஸ் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசியா அவர், அதிமுக – பாஜக கூட்டணி பிளவு என்பது கற்பனையானது, பொய்யானது. இந்த கூட்டணி பிளவு என்பது ஏற்கனவே, அவர்கள் முடிவு செய்து நடத்தக்கூடிய நாடகம் தான். கூட்டணியை விட்டு விலகிய காரணம் என்ன, எதற்காக வெளியேறினார்கள் என்ற காரணத்தை மக்கள் மன்றத்தில் அதிமுக விளக்கவேண்டும், ஏனென்றால் இது அரசியல், சொந்த குடும்ப பிரச்சனை அல்ல. இதனால், கூட்டணி பிளவு என்பது ஒரு நாடகம் என தெரிகிறது என விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
RKFI -scamers
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya