ஆளுநர், மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன் விளையாடவேண்டாம்! – ஆசிரியர் கீ.வீரமணி
தமிழ்நாடு ஆளுநர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரைப்போல் நாளும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட்.
ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியர் கீ. வீரமணி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையா? ஆளுநர் உரையில் இருப்பதை மறைப்பதும், இல்லாததை சேர்த்துப் படிப்பதும் ஆளுநருக்கு அழகா? ஆளுநர், மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன் விளையாடவேண்டாம்!
தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கத்திலிருந்தே, தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தையே நாளும் நடத்தி, வாக்களித்த மக்களின் பொறுமையைச் சோதித்து வருகிறார்
அவர் பதவியேற்றபோது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவின்கீழ் எடுத்த வாக்குறுதியை மீறி அரசமைப்புச் சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கிறார். ஆளுநரின் கடமை என்ன? தமிழ்நாடு ஆளுநர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரைப்போல் நாளும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு, சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி, ‘‘அரசியல்’’ நடத்தி வருகிறார் என ட்வீட் செய்துள்ளார்.
…உழைப்பேன்.
இதற்கு நேர் எதிராகவே பலமுறை நடந்து வருகிறார்; தமிழ்நாடு ஆளுநர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரைப்போல் நாளும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு, சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி, ‘‘அரசியல்’’ நடத்தி வருகிறார்.— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) February 14, 2023