கொரோனா நிவாரண நிதியாக ஆளுநர் பன்வாரிலால் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையால் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. அதிலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு, இந்த பேரிடரை எதிர்கொள்ளவதற்கு தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் கோரிக்கையை தொடர்ந்து, பலர் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
சற்று நேரத்திற்கு முன் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் முதலமைச்சருடன் சென்றனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…