இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் அரசமைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது.
மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்ட பல்கலைக்கழகங்களிலும் அரசியலைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பொறுப்பேற்றதில் இருந்து அவர் செல்லும் இடங்களிளெல்லாம் நீட், மும்மொழித்திட்டம், புதிய கல்விக்கொள்கை, சனாதனம், ஆன்மிகம், திராவிடம் உள்ளிட்டவைகள் குறித்து பேசுவது சர்ச்சையாகி வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் சர்ச்சைக்குறிய கருத்துகளுக்குப் பஞ்சமில்லாத ஓர் ஆளுநராக ஆர்.என்.ரவி பார்க்கப்படுகிறார்.
அமுல் இந்தியாவின் முன்மாதிரி.! ஆவின் கைக்கூலி… அண்ணாமலை கடும் தாக்கு.!
தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்ற போது, அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஏனெனில், நீட் தேர்வு ரத்து மசோதா, எழுவர் விடுதலை தொடர்பான மசோதாக்கள் அவரது கைகளில் இருந்தன. ஆனால், இந்த இரண்டு விவகாரங்களிலும் ஆளுநரின் செயல்பாடு தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. அதில் இருந்து தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
ஆளுநரின் செயல் அரசியல்வாதி போல் உள்ளது என பல்வேறு விமர்சங்கள் மற்றும் குற்றசாட்டுகளை அரசியல் கட்சியினர் வைக்க தொடங்கினர். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் ஆளுநர் எதாவது ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்து வருகிறார். அரசுக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடு, சர்ச்சை கருத்து களுக்கு கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…