மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வரிலால் மற்றும் அமைச்சர்கள் சென்னை, மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதுமட்டுமின்றி முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்த அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்த தினத்தில் மகாத்மா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…