#BREAKING : ஆளுநர் முதல்வர் சந்திப்பு நிறைவு..! பேசியது என்ன..?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ஆர்.என் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போது ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் ஆளுநர் மற்றும் முதல்வர் சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டத்தில், இந்த சட்டமுன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. 2021-2022ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக ஆளுநரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மேலும், இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். ஆளுநருடனான இந்த சந்திப்பின் போது, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi-1.webp)
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi.webp)