தமிழகத்தில் ஆட்சி அமைக்க திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பெறுப்பேற்கவுள்ளார். ஆனால், இந்தப் பதவியேற்பதற்கு முன் திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும்.
அதன்படி நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக ஸ்டாலினை சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று காலை சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையை ஸ்டாலின் கோரினார். இந்நிலையில், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அழைப்பு விடுத்தது குறித்து அவரது செயலாளர் ஆனந்தராவ் படேல் ஸ்டாலின் சந்தித்து நேரில் தெரிவித்தார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் படேல் தெரிவித்தார்.
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…