தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை அறிக்கை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆளுநர் மாளிகையில் 87பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக ஜூலை 28ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் ஆக-2 ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் ஆளுநர் அறிகுறியற்றவராகவும், சுறுசுறுப்பாகவும், சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.