சர்வாதிகாரி போல் ஆளுநர் செயல்படுகிறார் – முத்தரசன்
ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி சர்வாதிகாரி போல் ஆளுநர் செயல்படுகிறார் என முத்தரசன் பேட்டி.
தஞ்சையில் சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பாஜக ஆட்சியைப் பிடித்தது; தற்போது மணிப்பூரில் கலவரத்தை ஏற்படுத்தி, பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது; நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குகிறார்; தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி சர்வாதிகாரி போல் ஆளுநர் செயல்படுகிறார் என விமர்சித்துள்ளார்.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து அரசியல் தலைவர்களுள் விமர்சித்து வரும் நிலையில், சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.