ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த அரசின் நோக்கம்…..!!!
- ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த அரசின் முக்கிய நோக்கங்கள்.
இன்றைய அரசு மக்களுக்கான அரசு அல்ல. மக்களுக்காக அழுகிற அரசியல்வாதிகளின் காலம் காமராஜர் போன்ற நேர்மையான ஆட்சியாளர்களின் காலத்திலேயே முடிந்துவிட்டது.
இன்றைய அரசு, தங்களுக்காக தாங்களே ஆளும் அரசு தான் இன்று உள்ள அரசியல்வாதிகள். மக்களை மக்களாக பார்க்கும் காலம் மலையேறி போய் விட்டது. இந்த அரசு மக்களை அடிமைகளாக தான் பார்க்கிறது.
ஹைட்ரோகார்பன்:
ஹைட்ரோகார்பன் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் கலந்த கலவை. ஹைட்ரஜன், கார்பன் அணுக்களின் சேர்க்கையில் உருவான பல்வேறு மூலக்கூறுகளே ஹைட்ரோகார்பன். பெட்ரோலியம், நிலக்கரி, சமையல் எரிவாயு, இயற்கைவாயு மீத்தேன் போன்ற வேதிப் பொருட்கள் ‘ஹைட்ரோகார்பன்’ எனும் வேதிப்பொருள் வகையைச் சார்ந்தவை.
அரசின் நோக்கம்:
- அரசின் அடிப்டையான நோக்கம் கச்சா எண்ணெய் இறக்குமதியை 10 % அளவுக்கு 2022 இல் குறைக்க வேண்டும் .
- இந்திய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட பகுதிகளில் இருந்து சுமார் 15000 பேரல் கச்சா எண்ணெய் எடுக்கவும் 2 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் / டே (MMSCMD) வாயு எடுக்கவும் எதிர்பார்க்கின்றது .
- மேலும் இந்த திட்டத்தின் மூலமாக இந்திய அரசுக்கு 46400 கோடி ரூபாய் வருமானமும் மாநில அரசுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் வருமானமும் வர வாய்ப்புள்ளது .மேலும் அரசு பங்கின் மூலமாக 9600 கோடி ரூபாய்யும் வருமானமாக கிடைக்கும் .
- நெடுவாசல் மற்றும் காரைக்கால் திட்டத்தின் மூலமாக அரசுக்கு 300 கோடியும் மாநில அரசுக்கு ராயல்ட்டி மூலமாக 40 கோடியும் கிடைக்கும் .
ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக அரசியல்வாதிகள் போடும் இந்த சாதி திட்டம் தான் ஓட்டுக்கு பணம். இவர்கள் கொடுக்கும் சொற்ப பணத்திற்காக நாம் ஆசைப்பட்டு, நமது அனைத்து வகையான உரிமைகளையும் இழந்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
போராடுபவர்கள் தீவிரவாதிகள் என சொல்லும் அளவிற்கு மக்களின் நிலை உள்ளதா? தங்களது உரிமைக்காக குரல் கொடுக்கும் மக்களை தீவிரவாதிகள் என அழைக்கும் அளவிற்கு இந்த அரசு உள்ளதென்றால், நம்மை எப்படிப்பட்ட அடிமட்டமான அடிமைகளாக்கியுள்ளனர்.
சிந்தியுங்கள் மக்களே……!
இலவசமாய் கொடுத்து இளவரசராக்க வேண்டாம்…!
ஏனென்றால்,
துடைக்கப்பட வேண்டியது எங்கள் கண்ணீர்
வியர்வை அல்ல…!!
நமது உரிமைகளை கூட இன்று போராடி வெல்ல கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அரசியல்வாதிகள் மிக எளிதாக நம்மை சுரண்டி, வாக்குக்கு நமக்கு கொடுக்கு சொற்ப பணத்திற்கு பதிலாக பல மடங்கு கொள்ளையடித்து விடுகின்றனர்.
சிந்தித்து செயல்பட்டால், நமது சொந்த பந்தங்கள் போராடி சிந்திய விலைமதிப்பற்ற இரத்தத்திற்கு நாம் கொடுக்கும் கைம்மாறு, இந்த வாக்கு தான். சுயநலமற்ற, மக்களுக்காக ஆட்சி நடத்துகிற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்போம்.