தேர்ச்சி விவகாரத்தில் அரியர் மாணவர்களுக்கு அரசின் முடிவே உறுதியானது என கே.பி.அன்பழகன் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து தொழில்துறை என அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. தற்போது அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி பற்றிய அறிவிப்புகள் அண்மையில் வெளியாகியது.
அதில், கல்லூரியில் இறுதி பருவத்திற்கான தேர்வு எழுதக்கூடிய மாணவர்களை தவிர பிற பருவ மாணவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தி தேர்வுக்காக காத்து இருக்கக்கூடிய அரியர் மாணவர்களுக்கும் இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணம் கட்டாத அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில் அரசின் அறிவிப்பே செல்லும் எனவும் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…