அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி. 

சென்னை, அண்ணா மேலாண்மை  நிலையத்தில், குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்ற 36 தமிழக மாணவர்களுக்கு முதல்வர், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

பின் அந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் அண்ணா மேலாண்மை  நிலையம் அமைந்துள்ளது. சமூக நீதியை கடைபிடிக்கும் வண்ணம் அண்ணா மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தரவில் வெற்றி பெற 36 பேரில், 16 பேர் அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்.

 மேலும், மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவர் இதில் தேர்வாகியிருப்பது எனக்கு மிகவும் தேனிலும் இனிமையான செய்தியாக இருந்தது. அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி என்றும், அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் அதிகாரிகளுக்கு உள்ளது.

இந்திய அளவில் உயர் பதவியில் இருக்கும்போது பிறந்த மண்ணையும் தாய்மொழியையும் மறக்கக்கூடாது. அரசு வசதிகளை சிதைக்க நினைக்காமல் நேர்மையாகவும், தூய்மையாகவும் பணியாற்றவேண்டும். பிரச்சினையை கண்டு பயந்து ஓடாமல் எங்கிருந்து கிளம்பியது என்று ஆராய வேண்டும் என்றும் கூறினார்.

Recent Posts

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

42 mins ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

2 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

2 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

2 hours ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

3 hours ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

4 hours ago